வரும் ஜுலை 2024க்குள் தாமிரபரணி நீரினை குளிக்கும் தரத்திலிருந்து குடிக்கும் தரத்திற்கு மாற்ற தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதைச் சாத்தியப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், சாத்தியப்படுத்துவதற்கு முன் வைக்கப்படும் திட்டங்கள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் போன்றவற்றை எடுத்துக்கூற வருகிறார் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. மதிவாணன். அனைவரும் கலந்து கொண்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மேலான கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
21 நவம்பர் 2022, திங்கள் கிழமை, மாலை 6.30 மணி, மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி.


