ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளுக்கு கூட்டாம்புளியில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டாரப் பகுதி விவசாயிகள் ‘உழவர் உற்பத்திக்குழு குறித்த கண்டுநர் சுற்றுலா’வாக கூட்டாம்புளியிலுள்ள பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியான வேளாண்மை உற்பத்தி குழுக்கூடத்திற்கு இன்றையதினம் அழைத்து செல்லப்பட்டனர்.
விவசாயிகளுக்கு, விவசாய சாகுபடி பயிர்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் குழு சேர்மன் ராமச்சந்திரன் தலைமையில் சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
உற்பத்திக்குழுவின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ், வாழையில் இருந்து நார்களை பிரித்தெடுக்கும் இயந்திரம், உளுந்து உடைக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
இதில், விவசாயிகள் பங்கேற்று பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர் இசக்கிராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


