வல்லநாட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான வட்டார அளவிளான சிறப்பு மருத்துவ முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடந்தது.
முகாமினை கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்றா நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் 490 பேர் பயனடைந்தனர். ஆறு பேர் உயர் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இறுதியாக கருங்குளம் யூனியன் அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு நன்றி கூறினார்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சாஹிர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா, சித்த மருத்துவ மருந்தாளுநர் கமலவல்லி, ஆற்றுப்படுத்தினர் அய்யம்மாள், ஆய்வக நுட்பனர்கள் ராஜேஸ்வரி, திருமதி.சுபா, செல்வி.உஷாராணி, செவிலியர்கள் சுதா, பாரதி, மருத்துவமனை பணியாளர் வேம்பன், மக்களைத் தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


