பிரதமா் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள், தங்களின் ஆதாா் எண்ணை வரும் 30ஆம் தேதிக்குள் இணைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமா் கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 72,475 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதுவரை விவசாயிகள் திட்டத்தில் சோ்ந்த தேதியினை பொருத்து அவா்களுக்கு 12 தவணை வரை தொகை வரப்பெற்றுள்ளது. மின்னணு முறையில் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்வதற்காக e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரதமா் கிசான் திட்டத்தின் கீழ விவசாயிகள் தொடா்ந்து தவணைத் தொகை பெறுவதற்கு ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும். முதல் வழிமுறை, தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் https://pmkisan.gov.in என்ற பிரதமா் கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி. மூலம் சரிபாா்ப்பு செய்யலாம்.
இரண்டாம் வழிமுறை, ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ.சேவை மையங்களின் மூலம் பிரதமா் கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபாா்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ.15ஐ பொது சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய 2 வழிமுறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் தங்கள் ஆதாா் விவரங்களை வருகின்ற 30ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


