ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபராங்குச திருமண மண்டபத்தில் நடந்தது.
முகாமிற்கு, ஆழ்வார்திருநகரி கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரியார், ஒருங்கிணைப்பாளர் பொன்னுச்சாமி, தன்னார்வ தொண்டர் முத்துராஜ், இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன், பகுதி பொறுப்பாளர் ஆறுமுகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
முகாமினை, ஆழ்வை யூனியனின் கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். கண் மருத்துவர் செலின் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
முகாமில் பல்வேறு கிராமப்பகுதிகளையும் சேர்ந்த 100க்கும் பொதுமக்கள் பங்கேற்றனர். 22 பேர் இலவச கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.


