தெய்வச்செயல்புரத்தில் மின்கட்டண உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெய்வச்செயல்புரம் பஜாரில் இன்று பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நங்கமுத்து தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் மாவட்ட பொறுப்பாளர்களாக தொழில் பிரிவு மாநில செயலாளர் சீனிவாச ராகவன், மாவட்டச் செயலாளர் வக்கீல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தரவுத்தல மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பிறமொழி பிரிவு மாவட்டச் செயலாளர்கள் தம்பான், செந்தூர்பாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விவசாயி மாவட்ட செயலாளர் பேச்சி, விவசாய அணி ஒன்றிய தலைவர் ராமர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் நயினார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவர் திருமலை குமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் செல்வம், விருந்தோம்பல் பிரிவு ஒன்றிய தலைவர் ஜெயராமன், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சுடலைமுத்து, ஒன்றிய தலைவர் மாடசாமி, மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி ஜெயா, மகளிர் அணி தலைவர் சாந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஞ்சனா, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஹரிராமன், ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய பொருளாளர் பால் துறை, சமூக ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் சீனிவாசன், அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் வசந்த், கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் விநாயகப் பெருமான், அமைப்புசாரா பிரிவு ஒன்றிய தலைவர் வேல்மையில் பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் சித்திரைகுமார், மாரியப்பன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


