தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கிள்ளிக்குளத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, ஈரோடு மாவட்டம் கோட்டை காடு விஜயமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் நவீன்ராஜ் (19), இவர் இந்த கல்லூரியில் அக்ரிகல்ச்சர் பி.எஸ்.சி.முதலாமாண்டு மாணவரான நவீன்ராஜ் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நவீன்ராஜ் கடந்த மாதம் தீபாவளிக்கு விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் கல்லூரிக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது அவர் வீட்டில் உள்ளவர்களிடம் மீண்டும் கல்லூரிக்கு போகவில்லை என கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தினர். இதனால் கல்லூரிக்கு வந்த நவீன்ராஜ் மனவேதனை அடைந்திருந்தார். கல்லூரியில் உள்ள மாணவர் விடுதியில் இன்று யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் கல்லூரி மாணவர் நவீன்ராஜ் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


