மயிலிறகு குட்டிபோடுமென்று நம்பியிருந்தோம்.!
சிகரெட் அட்டைகள்
செலவுக்கு பணமென்று கவலை மறந்தோம்.!.
காக்காய் கடி கடித்து
நண்பனுக்கு பகிர்ந்தளித்தோம்.!
காகம் கரைவதற்கு
உறவுகள் வருமென்று
தெருவைப் பார்த்தோம்.!
அப்பழுக்கில்லா
இதயம் கொண்டு
உலகை கண்டோம்!
அம்மா அடித்தால்
பாட்டியின் மடியில்
அணைக்கக் கிடந்தோம்.!
அட போங்க….
அன்று அன்பை குடித்து
பாசம் வளர்த்தோம்!
நாம் இழந்த அனைத்தும் எங்கே.. ?
இயற்கை எங்கே?
தென்னை ஓலை எங்கே ?
பனையோலை விசிறி எங்கே?
பல்லாங்குழி எங்கே?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே?
கில்லி எங்கே ?
கும்மி எங்கே?
கோலாட்டம் எங்கே?
திருடன் போலிஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
கமர்கட் மிட்டாய் எங்கே?
குச்சி மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே?
இஞ்சி மரப்பா எங்கே?
கோலி சோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?
எலந்தை பழம் எங்கே?
பனம் பழம் எங்கே?
சீம்பால் எங்கே?
ரோசம் வளர்த்த கொங்கு மாட்டுப்பால் எங்கே?
பழைய சோறு எங்கே?
நொங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே?
கைகளில் சுற்றிய பம்பரம் எங்கே? நடைபழக்கிய நடை வண்டி எங்கே?
அன்பு எங்கே ?
பண்பு எங்கே?
பாசம் எங்கே?
நேசம் எங்கே ?
மரியாதை எங்கே?
சாஸ்திரம் எங்கே?
சம்பிரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே?
கூட்டு வண்டி எங்கே?
ஆழ உழுத எருதுகள் எங்கே ?
செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே ?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே ?
பொன் வண்டு எங்கே?
சிட்டுகுருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே?
விளை நிலம் எங்கே?
ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே?
மண் புழு எங்கே ?
வெட்டு மண் சுமந்த கூடை எங்கே ?
பனை ஓலை குடிசை எங்கே?
குளங்கள் எங்கே?
தேகம் வளர்த்த சிறு தானியம் எங்கே?
அம்மிக்கல் எங்கே?
ஆட்டுக்கல் எங்கே?
கால் கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே?
நல்லது கெட்டது சுட்டிகாட்டும் பெரியவர்கள் எங்கே?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்கள் எங்கே ? தாய்ப்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே? மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே? இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பை எங்கே?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே?
சுத்தமான நீரும் எங்கே?
மாசு இல்லாத காற்று எங்கே?
நஞ்சு இல்லாத காய் கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்கள் எங்கே?
எங்கே ? எங்கே ? எங்கே ??? எங்கே ???? எங்கே ??
எல்லாவற்றையும்விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே…?
இதற்கு….பாமரனாலும் , மெத்தபடித்தவனாலும் , ஏன் ….. விஞ்ஞானியாலும் , கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது .
ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் என்னும் காகிதத்தைத் தேடி இந்த உலகில் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்..
இதுதான் இன்றைய மனிதனின் நிலை….
மீண்டும் வராதோ அந்த பொற்காலம்..


