மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் சேதுக்கு வாய்தான் பகுதியில் தாமிரபரணி ஆற்று ஓரங்களில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும் மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.
இதில் சுமார் ஐந்து அடி முதல் 12 அடி உயரம் உள்ள புங்கை மற்றும் வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு சேதுக்கு வாய்தான் பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன் தலைமை தாங்கினார் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்கமல் முன்னிலை வகித்தார். இதில் காயல்பட்டினம் நகரத் தலைவர் முத்துக்குமார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சீனிவாசன் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி உட்பட பல கலந்து கொண்டனர்


