ஸ்ரீவைகுண்டம் அருகே நர்சிங் மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் புவனேஸ்வரி (19), நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராமகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


