தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்து வருகிறது. இதில் 5 ஆம் நாளான இன்று திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் கருங்குளத்தில் நடந்தது.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்ஸ்டுவர்ட் முன்னிலை வகித்தார். முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் ஏற்பாட்டில், டாக்டர் லயனல்ராஜ் குழுவினர் இந்த முகாம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் விழி ஒளி ஆய்வாளர் சிஞ்சு, கண்பரிசோதனையாளர்கள் வின்ஸ்லின், சுவேதா, ஆசிரியர்கள் பெஞ்சமின், ஸ்டீபன், சந்தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் சக்திவேல் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


