மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கருங்குளம் மாதங்கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் மூக்காண்டி (எ) வெங்கடசுப்பிரமணியன் (37) என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்காரரிடம் தகராறு செய்து அவரை மதுபாட்டிலால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் மூக்காண்டி (எ) வெங்கடசுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட மூக்காண்டி (எ) வெங்கடசுப்பிரமணியன் மீது செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உட்பட 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


