தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள நாணல்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கந்தசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேல் மகன் சின்னத்துரை என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24.10.2022 அன்று கந்தசாமி, நாணல்காடு பகுதியில் உள்ள இசக்கி என்பவரது தோட்டத்திற்கு வந்தபோது அங்கு மது போதையில் வந்த சின்னத்துரை மற்றும் அவரது நண்பரான நாணல்காடு அக்ரகார தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் கணேசன் ஆகிய இருவரும் சேர்ந்து கந்தசாமியிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கந்தசாமி அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சின்னத்துரையை தேடி வருகின்றனர்.


