செக்காரக்குடியில் சத்தான தானிய பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சத்தான தானியங்களுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி கிராமத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமை வகித்தார்.
நான்கு கட்டமான நடைபெறும் இந்த பயிற்சியின் முதல் பயிற்சி இன்று நடந்தது. செக்காரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் ஜெயசெல்வின் இன்பராஜ் சத்தான தானிய சாகுபடி செய்யும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். துணை வேளாண்மை அலுவலர் பரமசிவன் வேளாண்மை துறை திட்டங்கள் குறித்து கூறினார்.
இந்த பயிற்சியில் செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த 30 விவசாயிகள் பங்கு பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தின் செய்திருந்தார்.


