திருச்செந்தூர் டாகடர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 200க்கும்மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்பு முகாம் வருகிற 28 ந்தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 வதுவகுப்பு, 10 வது வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ , கல்லூரி படிப்பு உள்ளவர்கள் கலந்துகொண்டு, அவரவர்கள் தங்களுக்கு ஏற்ற வேலைகளை தேடிக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பயணாளிகளுக்காக காலை 8 மணி முதல் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்துகிறது. தொடர்புக்கு 9442822522 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.


