எல்லோராலும் லாந்தர் விளக்கு என்று அழைக்கப்படுவது அரிக்கேன் லைட்டாகும். சிம்னிவிளக்கின் வெளிச்சக்குறைவைப் போக்குவதற்காக இவ்விளக்கானது உருவாக்கப்பட்டது.
மின்சாரம் அறிமுகம் இல்லாத அந்த காலத்தில் ராப்பொழுதுகளில் அரிக்கேன் லைட்டின் தேவையும் அவசியமும் முக்கிய பங்கு வகித்தது.
சாயங்காலமே அரிக்கேன் லைட்டில் இருந்து கோழி மூட்டை போன்ற கண்ணாடி சிமினியை எடுத்து திருநீறு அல்லது அடுப்பு சாம்பல் கொண்டு துடைத்து சுத்தப்படுத்தி, மண் எண்ணெய் நிரப்பி, லாந்தர் விளக்கை ஏற்ற இருட்டு ஓடிவிடும்.
சமைத்து சாப்பிட , குழந்தைகள் படிக்க, தாவணி தேவதைகள் கதை/நாவல்கள் படிக்க என லாந்தர் தனது ஒளியை உமிழந்து கொண்டே, இறுதியில் எதோ ஒரு தூக்கம் தழுவிய கண்கள் லாந்தரை அணைத்துவிட அன்றைய பொழுது அடங்கி விடும்.
இப்படி அன்றைய வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்திருந்த அரிக்கன் லைட் இன்று மறைந்து போன புழங்கு பொருட்கள் பட்டியலில்
இடம் பிடித்துப் போனது.


