செய்துங்கநல்லூர் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் திருக்கோவில் சனிப்பிரதோசம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையட்டி இன்று காலை 8 மணிக்கு சுவாமி அம்பாள் நந்திக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. மாலை 4.30மணிக்கு மகா சனிபிரதோசம் நடைபெற்றது. இதையட்டி சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இதற்காக பிள்ளையார் கோயிலில் இருந்து சுவாமி அம்மாள் சப்பரத்தில் ஊர்வலமாக நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. 9.30 மணிக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. 9.35 மணிக்கு திருக்கோவிலில் பள்ளியறை வெகு சிறப்புடன் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9.40 மணிக்கு கால பைரவர் பூஜை நடைபெற்றது. இதற்க்கான ஏற்பாடுகளை ஆன்மிக பேரவை செய்திருந்தது.



