தூத்துக்குடியில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, குறு, சிறு – நடுத்தர தொழில்நிறுவனத் துறை தொழில் ஆணையர் – தொழில் வணிக இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சிஜி தாமஸ் வைத்யன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழை தொடா்பான முன்னேற்பாடு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், அது தொடா்பாக ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையா் த.சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.


