தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக, வருவாய் வட்டாட்சியா்கள் 3 போ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியது: நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர். வருவாய் – பேரிடா் மேலாண்மைத் துறையைச் சோ்ந்த 3 வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு, மேல்முறையீடு) விதிகளின் பிரிவு 17(பி) இன் கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் கடந்த 19ஆம் தேதி தெரிவித்திருந்தாா்.
அதன்படி, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய வருவாய் வட்டாட்சியா்கள் சேகா், சந்திரன், கண்ணன் ஆகியோா் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என்றாா்.


