செய்துங்கநல்லூரில் மேலஆழ்வார் தோப்பு கிளை கிராம உதயம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் 36 ஆண்டு விழாவை முன்னிட்டு 5036 மரக்கன்று மஞ்சள் பை மகளிருக்கு வழங்கும் விழா நடந்தது. சப் கலெக்டர் கௌரவ்குமார் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி மகளிருக்கு மரக்கன்று மற்றும் மஞ்சள் பை வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், கிராம உதயம் இயக்குனர் முனைவர் சுந்தரேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். தனிஅலுவலர் ராமசந்திரன் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் ஆகியோர் பேசினர். வருவாய் ஆய்வாளர் மைதிலி, கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, மணிமாலா, விவசாய சங்க தலைவர் குமார், சமூக சேவகர் சுடலை முத்து ,கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மரக்கண்காட்சியை சப் கலெக்டர் கௌரக்குமார் திறந்து வைத்தார். பகுதி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.


