கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோயிலில் மேலஆழ்வார் தோப்பு கிளை கிராம உதயம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் 36 ஆண்டு விழாவை முன்னிட்டு 36 மரக்கன்று நடும் விழா நடந்தது. சப்கலெக்டர் கௌரவ்குமார் கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஸ்ரீவைகுண்டம் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், ஸ்ரீவைகுண்டம் அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அதிகாரி பாண்டிப்பெருமாள், கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் தனிஅலுவலர் ராமசந்திரன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நடராஜன், உலகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்பு கொட்டும் மழை சப்கலெக்டர் வீரபாண்டீஸ்வரர் ,பொன்னுறுதி அம்மன், சட்டநாதரை கோட்டாச்சியர் கௌரவ் குமார் தரிசனம் செய்தார். கோயிலில் மழைத் தண்ணீரில் இறங்கி கோயில் உள்பிரகாரத்தினை சுற்றி வந்தார். பூஜை ஏற்பாடு அர்ச்சகர் குணசேகர் மற்றும் சட்டநாதர் மேம்பாட்டு குழு செய்திருந்தது.


