செய்துங்கநல்லூர் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் திருக்கோவில் வருகிற 22 ந்தேதி சனிப்பிரதோசம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
22 ந்தேதி சனிகிழமை காலை 8 மணிக்கு சுவாமி அம்பாள் நந்திக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறும். மாலை 4.30மணிக்கு மகா சனிபிரதோசம் இதையட்டி சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறும். 9.30 மணிக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். 9.35 மணிக்கு திருக்கோவிலில் பள்ளியறை வெகு சிறப்புடன் நடைபெறும், இரவு 9.40 மணிக்கு கால பைரவர் பூஜை நடைபெறும். இதற்க்கான ஏற்பாடுகளை ஆன்மிக பேரவை செய்து வருகிறது.


