ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை பணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட தேசிய மாணவர் படை கமாண்டண்ட் அலுவலர் சுனில் உத்தம்உத்தரவு படி 2022&23 ஆண்டின் சமூக பணிகள் தேசிய மாணவர் படை மூலம் நடந்து வருகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்களின் தூய்மை பணி ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது. இந்த பணியில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் தேசிய மாணவர் படை மாணவர்கள் அனைவரும் கலந்து கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீவைகுண்டம் தெற்கு மாசி வீதி, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில் செல்லும் வழிகள், திருக்கோயிலின் வெளிப்புறப் பகுதிகளையும் உட்புற பகுதிகளையும் சுத்தப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் கண்ணன் தேசிய மாணவர் படை மாணவர்களை வரவேற்றார். இந்த தூய்மை பணியில் மாணவர் படையினர் ஆவலுடன் ஈடுபட்டனர். அவர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை பள்ளி தேசிய மாணவர் படை ஆசிரியர் மாணிக்கம் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி முடிவில் அவர் நன்றி தெரிவித்தார்.


