202. தருவை கிராமத்தில் சுத்தாங்க சுவிசேஷ சபை.
தருவை கிராமத்தில் சுத்தாங்க சுவிசேஷ சபை உள்ளது. தருவை பஞ்சாயத்துக்கு உள்பட்ட ஓமநல்லூர் , கண்டித்தான்குளம் ஆகிய பகுதியில் இந்த சபை உள்ளது. பெரும்பாலுமே கிறிஸ்தவ மதத்தில் சி.எஸ்.ஐ என்ற பிரிவு தாமிரபரணி கரையில் மிக அதிகமாக உள்ளது. அதற்கான ஆலயம் குறித்து நாம் பார்த்து வருகிறோம்.
தருவை பஞ்சாயத்துக்குள்பட்ட ஒமநல்லூர் மற்றும் கண்டித்தான் குளத்தில் இதுபோன்ற சுத்தாங்க சுவிசேஷ சபை உள்ளது என்றவுடன் அன்பு நண்பர் கல்லிடைக்குறிச்சி ஜான் ஞானராஜ் அவர்களிடம் கேட்டேன். அவர் இந்த சபை குறித்து மிகப்பெரிய தகவலை கொடுத்தார்.
அந்த தகவல் எனக்கு புதிதாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.
1924 இல் சி.எம்.எஸ். மிஷன் சபைகளுக்குள் ஏற்பட்ட சுத்தாங்க சுவிசேஷ சபை பிளவு ஏற்பட்டது.-
சுத்தாங்க சுவிசேஷ சபை பிளவினால் ஒரே கிராமத்தில் காணப்படும் இரண்டு புராட்டஸ்டண்ட் சபை தேவாலயங்கள் உள்ளன.
பழங்கால செவல் சர்க்கிள் பற்றி நாம் காணலாம்.
இதன் தலைமையிடம் இடையன்குளம். இங்குள்ள சபை இடையங்குளம், கரிசல், ஒடைக்கரை, மேலஉப்பூரணி, கீழஉப்பூரனி, வடவூர்பட்டி, ஆரைக்குளம், கண்டித்தான்குளம், கீழ ஓமநல்லூர், புலவன்குடியிருப்பு , வடக்கு இடையன்குளம், பிள்ளைகுளம், சடையப்பபுரம் ஆகிய ஊர்கள் இதில் உண்டு.
பழங்கால டோனாவூர் சர்க்கிள் பற்றிய விவரம் வருமாறு
டோனாவூர், மேலபத்தை, களக்காடு, பெருமாள்குளம் ஆகியவை யாகும்.
பழங்கால ஆழ்வாநேரி சர்க்கிள் பற்றி விவரம் வருமாறு
ஆழ்வாநேரி, மருதகுளம், மூன்றடைப்பு, பாணான்குளம், பூக்குழி, பேரின்பபுரம், தட்டான்குளம், கோடங்குளம், கழுதூர், துத்திகுளம், கீழகோடங்குளம், கோவைகுளம், புதுகுளம், அம்பலம், கொங்கந்தான்பாறை புதுக்குளம் ஆகியவையாகும்.
தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் விவரம் வருமாறு.
செம்பொன் குடியிருப்பு, மேலபனைக்குளம், கலுங்குவிளை,
சாயர்புரம், செந்தியம்பலம்
மேற்கண்ட அனைத்து இடங்களிலும் சி.எம்.எஸ் (தற்போதைய சி.எஸ்.ஐ) திருச்சபை மற்றும் சி.எம்.எஸ். சுத்தாங்க சுவிசேஷ திருச்சபை என இருவிதமான புராட்டஸ்டண்ட் திருச்சபைகள், தேவாலயங்கள் காணப்படுகின்றன. இதற்கு மூல காரணமாய் விளங்குவது 1924 இல் சி.எம்.எஸ். மிஷன் சபைகளுக்குள் ஏற்பட்ட சுத்தாங்க சுவிசேஷ சபை பிளவு ஆகும் அதைக்குறித்து விரிவாக காண்போம்.
1799 இல் லண்டனை தலைமையிடமாக கொண்டு சி.எம்.எஸ். எனும் சர்ச் மிஷன் சங்கம் நிறுவப்பட்டது.
சி.எம்.எஸ். மிஷன் சங்கத்தில் இறையியலில் தாராளமயமாக்கம் எனும் போர்வையில் உபதேச மாற்றங்கள் 1917 இல் ஏற்படத் தொடங்கியது. மாண்டேகு, செம்ஸ்போர்டு பிரபுக்களும் சில பேராயர்களும் அதை ஆதரித்தனர்.
சி.எம்.எஸ் மிஷன் சங்கம் தனது அடிப்படைக் கொள்கையை விட்டு கொஞ்சமும் வழி விலகக்கூடாது அதில் உறுதிப்பட நிலைத்து இருக்க வேண்டும் என்பதை சி.எம்.எஸ் மிஷன் சங்கத்தின் அடிப்படை நம்பிக்கையான சுத்தாங்க சுவிசேஷம் என்னும் வேதாகமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளும் நம்பிக்கை மீது பற்றுதி கொண்ட சி.எம்.எஸ் மிஷன் பேராயர்களும், ஊழியர்களும், சி.எம்.எஸ். மிஷன் ஊழியத்தை தாங்கிவந்த ஆதரவாளர்களும் சி.எம்.எஸ் சங்கத்தாரைக் கேட்டுக்கொண்டனர், அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை .
ஆகையால் பைபிள் சர்ச்மென்ஸ் மிஷன் சொசைட்டி என்ற அமைப்பை சர்ச் மிஷன் சொசைட்டி என்ற சி.எம்.எஸ். மிஷன் தாய் அமைப்பில் இருந்து பிரிந்த ஒரு அமைப்பினர் 27 .10 .1922 இல் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த அமைப்பு பி.சி.எம்.எஸ். என அழைக்கப்பட்டது.
சி.எம்.எஸ்.மிஷனரி சங்க ஊழியங்கள் கனம். ரேனியஸ் ஐயரவர்களின் மூலமாக 1814 முதல் சென்னையிலும் 1820 முதல் அக்கால ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திலும் (தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களாக உள்ளது.) சி.எம்.எஸ் மிஷனரி¢ சங்கம் Church of England எனும் ஆங்கிலிக்கன் திருச்சபையின் ஓர் அங்கமாக இருந்தாலும் சடங்காச்சாரங்கள் இல்லாத சுத்த சுவிசேஷம் எனும் வேதாகமத்தை அடிப்படையாகக்கொண்ட சுத்தாங்க சுவிசேஷம் எனும் கொள்கையை சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகமும் அதில் பேராசிரியர் பணி செய்கிறவர்கள், படிக்கிற மாணவர்கள் என அனைவரும் குழுவாக சேர்ந்து ஜெபத்தால், தங்களது பண உதவியால் சி.எம்.எஸ். மிஷனரி¢ சங்க நற்செய்தி பணிகளையும் அவர்களால் அனுப்பப்பட்ட சி.எம்.எஸ். மிஷனரி ஊழியர்களையும் தாங்கி வந்தார்கள்.
1828 – 1832 க்கு உட்பட்ட காலத்தில் ஆக்ஸ்போர்டு எழுப்புதல் இயக்கம் இங்கிலாந்தில் எழும்பியது.
இங்கிலாந்து அரசுக்கும் இங்கிலாந்து திருச்சபைக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட மாற்றமே இவ்வியக்கம் எழும்புவதற்கு காரணமாக அமைந்தது.
Church of England எனும் இங்கிலாந்து திருச்சபையில் புராட்டஸ்டன்ட் சிந்தனை மற்றும் நடைமுறைகளுக்கு மாறுதலாக கத்தோலிக்க சிந்தனை மற்றும் நடைமுறைகள் ஊடுருவியதே இந்த இயக்க உருவாக்கத்திற்கு மூல காரணமாக அமைந்தது.
ஸிமீஸ். ஜான் ஹென்றி நியூமன்,,ஸிமீஸ். ரிச்சர் ஹர்ரல்,ஸிமீஸ். எட்வர்ட் ஆகிய போதகர்கள் இந்த இயக்கத்தின் தொடக்கத்திற்கு மூலகாரணமாக இருந்தார்கள். படிப்படியாக ஆக்ஸ்போர்டு எழுப்புதல் எனும் ஆங்கிலோ கத்தோலிக்க இயக்கம் இங்கிலாந்தில் வலுப்பெற்றது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மதகுருமார்கள் பேராசிரியர்கள் இந்த எழுப்புதல் இயக்கம் வலிமையாக பேருதவியாக செயல்பட்டார்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சி.எஸ்.ஐ. மிஷனரி சங்கத்தை தாங்கி வந்தது இங்கு கல்வி கற்றவர்கள் சி.எஸ்.ஐ மிஷனரிகளாக உலகமெங்கும் நற்செய்தி பணியாற்ற சென்றனர்
ஆக்ஸ்போர்ட் இயக்கம் ஏற்பட்டதற்கு பின்பு வந்த எஸ்.பி.ஜி மிஷனரிகள் சடங்காச்சாரங்களை அதிகமாக தாம் பணிசெய்த திருச்சபைக்குள் புகுத்தினர் இங்கிலாந்திலும் பிறநாடுகளிலும் ஆங்கிலிக்கன் திருச்சபை யில் இவை இடம் பெறலாயிற்று. சடங்காச்சாரங்களில் ஆர்வம் மிக்க போதகர்கள் ஆங்கிலிக்க சபைக்குள் அதிகமாயினர் இவர்களால் ஆங்கிலிக்கன் திருச்சபை மூலம் நற்செய்தி பணியை செய்து வந்த மிஷனரி இயக்கங்களிலும் சடங்காச்சாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இரு மிஷன் சங்கங்களின் இணைப்பு முயற்சியால் சடங்காச்சாரங்கள் சி.எஸ்.ஐ சபைக்குள் நுழைந்து விடுமோ என மிஷன் சபை போதகர்களும் பெரியோர்களும் அஞ்சினர் இதுவே சுத்தாங்க சபை பிளவுக்கு மூலகாரணமாக பிற்காலத்தில் அமைந்தது.
(நதி வற்றாமல் ஓடும்)


