தாமிரபரணியில் வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீரை வறட்சி பகுதியான சாத்தான்குளம், திசையன் விளை பகுதியில் சேர்க்க வேண்டும் எனத் தாமிரபரணி வெள்ளக்கால்வாய்திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டப் பணி திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாங்குழி என்னும் இடத்தில் துவங்கி சேரன்மகாதேவி, தருவை , கண்டித்தான் குளம் வழியாக மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சி பட்டி வழியாகத் திசையன் விளை எம்.எல். தேரி ஆகிய இடங்களில் இந்த தண்ணீரைக் கொண்டு விடுகிறார்கள். இந்த திட்டம் மூலமாகத் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு மூன்றையும் இணைக்கும் திட்டமாகச் செயல்படுகிறது. இந்த பணிகளை பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா பார்வையிட்டார். இவர் எம்.எல்.தேரியில் பணி நடைபெறும் இடத்தினை பார்வையிட்டார்.அதன் பின் சாத்தான்குளம் சென்று ஓய்வு பெற்ற ஆசிரியர் மகாபால்துரையை சந்தித்து, பேசினார். தொடர்ந்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமரா சுவை செய்துங்கநல்லூரில் சந்தித்து வெள்ள கால்வாய் திட்டம் குறித்து தகவல்களைச் சேகரித்தார்.
அவருடன் பா.ம.க மாநில துணைத்தலைவர் குருநாதன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ், மாவட்ட தலைவர் முத்து சரவணன், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் முத்தையா, துணை செயலாளர் முருகன், பசுமை தாயகம் சாம் பாபு உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


