கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
பெற்ற விருதுகள்
சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது – கீதாஞ்சலி (2014)[2]
சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது – கீதாஞ்சலி (2014)
சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது – கீதாஞ்சலி (2014)
சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது – கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர்
2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது – மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் (தமிழில் – நடிகையர் திலகம்) பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் நடித்தமைக்காக வழங்கப்பட்டது.


