திருச்செந்தூர் கோவில் கடற்கரை அருகே இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் 2 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட சுமார் 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டும் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த வகை ஆமை திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும்.
இது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டு இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்பசு திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடல்வாழ் உயிரினங்களை காக்க, தொடர்ந்து இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


