செய்துங்கநல்லூரில் செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் கால போலி ஒத்திகை பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆலோசனையின் பேரிலும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் பேரிடர் கால போலி ஒத்திகை பயிற்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு நிலைய அலுவலர் ஜேசுபால் ஞானத்துரை, சீனிவாசன், ராமஜெயம், சங்கரநாராயணன், பழனி, பார்வதிமுத்து ஆகியோரால் கல்லூரி மாணவர்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி நடத்திக் காட்டப்பட்டது.
இதில் வருவாய்த் துறையினர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


