தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ நாலாந்துலா கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இலாபகரமான கறவைமாடு வளர்ப்பு குறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. இக்கிராமத்தில் அதிகமாக விவசாயிகள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் கால்நடை வளர்ப்பு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கறவைமாடுகளை பல நோய்கள் தாக்குவதாலும் அதன் தீவனத்திற்கு அதிக பணம் செலவு செய்யவேண்டியுள்ளதாலும் அந்த தொழில் இலாபகரமாக இல்லை என்ற நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சரிவிகித உணவு கொடுத்தல், தீவன செலவை குறைப்பது, அடர்தீவனம் தயாரிக்கும் வழிமுறைகள், பசும்தீவனங்களை உற்பத்தில் செய்தல், தடுப்பு ஊசிகளை சரியான நேரத்தில் போடுவது, நோய்கள் வராமல் பாதுகாப்பது குறித்து உதவி பேராசிரியர் ரவிமுருகன் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், திருநெல்வேலி அவர்கள் விளக்கினார்கள். 40 க்கும் அதிகமான கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


