திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை மிகவும் பிரதான சாலையும். இந்த வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக சிறப்பு பெற்ற ஸ்தலங்கள் உள்ளது. குறிப்பாக திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோவில். இந்த கோவிலில் வருடத்திற்கு ஆறு முறை திருவிழா நடைபெறும். இதற்காக தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையில் ஓரம் நடந்து செல்கின்றனர். தொடர்ந்து அடுத்த மாதம் முதல் தைப்பூசத்திருவிழா தொடங்க உள்ளது. அந்த சமயங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்வார்கள்.
இது மட்டுமல்லாமல் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சுற்றி 9 நவத்திருப்பதி ஸ்தலங்களும், 4 நவகைலாயங்கள், ஏராளமான கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்கள் உள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் புதிய பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் ஒரு மூட்டையில் மருத்துவ கழிவுகளை வீசிச் சென்றுள்ளனர். அந்த மூட்டையில் 100க்கும் மேற்பட்ட மருந்துகளின் பாட்டில்கள் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களும், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில் பேரூராட்சி தூய்மை பாதுகாவலர்கள் மூட்டையில் கிடந்த மருத்துவ கழிவுகளை அகற்றினர்.


