தூத்துக்குடியில் நடைபயிற்சி சென்றபோது பைக் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி டிஎம்பி காலனி சேர்ந்தவர் முத்துப்பிள்ளை மகன் கருப்பசாமி (78). தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று இவர் நேற்று மாலை தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள எம்ஜிஆர் பூங்காவில் நடைபயிற்சி சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து பைக்கை ஓட்டி வந்த தூத்துக்குடி பிஎன்டி காலனியைச் சேர்ந்த முத்துராஜ் (37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


