தூத்துக்குடி பாம்ஸ் அகாடமி அரங்கில் கவிதை நூல் வெளியிட்டு விழா நடந்தது.
தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் இன்று தூத்துக்குடி கவிஞர்.ஆ.மாரிமுத்து எழுதிய “உளிதீண்டா கல்லோவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா தூத்துக்குடியில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கில் நடந்தது.
விழாவிற்கு நாசரேத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கண்ணகுமார விஷ்வரூபன் தலைமை வகித்தார். கோவில்பட்டியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் பிரபு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும், தூய மரியன்னை பெண்கள் கல்லூரிப் பேராசிரியருமான எழிலரசி நூலை வெளியிட, மூக்குப்பேறி கவிஞர் தேவதாசன் நூலைப் பெற்றுக்கொண்டார்.
கோவில்பட்டி கவிஞர் தங்கத்துரையரசி, நெல்லை கவிஞர் சக்தி வேலாயுதம், தூத்துக்குடி எழுத்தாளர் வருணன் ஆகியோர் நூலைத்திறனாய்வு செய்து பேசினார்கள்.
ஸ்பிக் நகர் எழுத்தாளர் பிரபாகர், சிப்காட் தனி வட்டாட்சியர் அழகர், தூத்துக்குடி ஏபிசி மகளிர் கல்லூரி தமிழ்துறை உதவிப்பேராசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நூலாசிரியர் கவிஞர் ஆ.மாரிமுத்து ஏற்புரை வழங்கினார். நிறைவாக தொடுவானம் கலை இலக்கியப்பேரவையின் தலைவர் நெல்லை தேவன் நன்றி கூறினார்.


