தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினமான 02/10/2022 அன்று கிராமசபை கூட்டம் செக்காரக்குடி சேவை மையத்தின் அருகில் நடைபெற்றது.
செக்காரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் கலந்து கொண்டார். பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பயணாளிகளுக்கு வருடத்திற்கு ஆறு முதல் பத்து நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதனை அரசு சட்டப்படி நூறு நாட்கள் முழுமையாக பணி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். உரிய பரிசீலனை செய்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி நூறு நாட்கள் முழுமையாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் ஆகியோர் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.


