75 வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர்களை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தக்கலை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் வரைபட போட்டி நடத்தப்பட்டது. தக்கலை கல்வி மாவட்ட அலுவலர் எம்பெருமாள் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் இலுப்பவிளை உயர்நிலை பள்ளி, கடியப்பட்டினம் மகளிர் மேல்நிலை பள்ளி மற்றும் அம்மாண்டிவிளை மேல்நிலை பள்ளியில் வரைபட போட்டி நடத்தப்பட்டது. இதில் 100 மாணவர்கள் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தலைவர்கள், இராணுவவீரகள், இந்தியாவிலுள்ள வளங்கள் மற்றும் தற்போது நிலவும் பிரச்சினைகள் போன்றவற்றை வரைபடம் மூலம் விளக்கினார். அம்மாண்டிவிளை மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை சாரங்க பாய், கடியப்பட்டினம் மகளிர் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை சஜி சந்திரா மற்றும் இலுப்பவிளை உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியை ரெஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


