செய்துங்கநல்லூரில் வீட்டில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பற்றி தீக்காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ஆர்.சி., கோயில் தெருவைச் சேர்ந்தவர் நல்லபெருமாள் மனைவி முத்துலட்சுமி (86). இவர் கடந்த 26ம் தேதி வீட்டில் குத்துவிளக்கு ஏற்றியபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தசம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


