ஸ்ரீவைகுண்டம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் கிராம சாவடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (37). உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் அந்தோணி மகராஜா (30). நண்பர்களான இவர்கள் 2பேரும் தூத்துக்குடிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பேட்மா நகர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த பைக் இவர்கள்து பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மாரிமுத்து, அந்தோணி மகராஜா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்தோணி மகராஜா நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழ்ககுப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். எதிரே வந்த பைக்கை ஓட்டிவந்த பேட்மாநகர் தெற்கு தெருவைச் சேர்ந்த சிராஜூதின் மகன் உமர் (20) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


