என் அப்பாவை என் மகனோடு பார்க்கச் சென்றேன்.(short story)
அப்பா என்னையும் பேரனையும்
கண்ட பூரிப்பில் ஓடிவந்து,
“இளைச்சு போயிட்டியே ராசா” என என்னைப்பார்த்து கண் கலங்கினார்.
அப்போது நானும் கூட கண் கலங்கினேன்.
“தாத்தா நீங்கதான் ரொம்ப ஒல்லியா ஆயிட்டீங்க” என
தாத்தாவின் கரம் பற்றிக்கொண்டு ,
என்னிடம் “நம்ம வீட்டுக்கு தாத்தாவை கூட்டிட்டு போவோமாப்பா” என்றான்.
“அது வேணாம் பா அது சரிவராது” என என் மகன் தோளில் தட்டினேன்.
“தாத்தாவ பாக்க பாவமாயிருக்கு… ரொம்ப கஷ்டப்படுற மாதிரி தெரியுது” என எனது கையை பற்றிக் கொண்டான் என் மகன்.
உடனே அப்பா தன்னிடமிருந்த ரூபாயில் இருதாட்களை எடுத்து என் மகனுக்கு கொடுக்க…
அப்பாவிற்கு நான் கொண்டுவந்த மாதச் செலவுத் தொகையைக் கொடுக்க…
‘இதெல்லாம் எதுக்குப்பா’
என் கேட்டுக்கொண்டே …
இது போதும் எனக்குன்னு சில ரூபாய் தாட்களை என்னிடம் நீட்ட அப்பாவின் சட்டை பையில் திணித்தேன்.
பரிவும் பரிவுமற்ற
பரிமாற்றம் நடைபெற்றது.
” அப்பா
நான் பெரியவனானதும்
இதைவிட வசதியான ஹோம்ல உங்கள சேக்கிறேன்” என்றான் என் மகன்.
ஸ்தம்பித்துப் போனேன் நான்.
கண்ணீர் வடித்தபடி என் மகனை கட்டிப்பிடித்தார் அப்பா…
இன்னொரு தாத்தாவிடம்
பேசப் போனான் என் மகன்!


