தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே இட்டமொழி புதூரைச் சேர்ந்த சேகர் மகன் பிரபாகர் (28), வேணுகோபால் மகன் சரவணன் (32), இட்டமொழியைச் சேர்ந்த தங்கதுரை மகன் சுடலை கண் (37) ஆகிய மூவரும் நேற்று சாத்தான்குளம் பகுதியில் உள்ள கிராமங்களில் வேப்பம் விதை வாங்கும் வேலை செய்து விட்டு ஒரே பைக்கில் சாத்தான்குளத்துக்கு வந்துவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
புதுக்குளம் விலக்கு அருகே சென்றபோது நாகர்கோவிலிலிருந்து சாத்தான்குளம் நோக்கி வந்த அரசு பேருந்து அவர்களது பைக் மீது எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பிரபாகர், சுடலைக்கண்ணு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சரவணன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமா£¢ வழக்குப்பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.


