சாத்தான்குளம் அருகே தூய மிகாவேல் முதலான தேவ தூதர்களின் ஆலயத்தில் மாபெரும் அசன பண்டிகை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் தூய மிகாவேல் முதலான தேவ தூதர்களின் ஆலயம் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வருடந்தோறும் அசன விருந்து நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 139வது அசன விருந்து நடந்தது. 6 டன் அரிசி, 1.5 டன் பருப்பு மற்றும் காய்கறிகள் கொண்டு சமைத்து பாயாசத்துடன் மாபெரும் அசன விருந்து நடந்தது. இதில் சாத்தான்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாதி மத இன பாகுபாடு இன்றி இந்த அசன விருந்தில் பங்கு பெற்று உணவு அருந்தி உணவு வாங்கி சென்றனர்.
முன்னதாக ஆலயத்தின் கோபுரம் மிக நேர்த்தியாக அழகாக வண்ண விளக்குகளால் பார்ப்பவர் கண்களை கவரும் விதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த அசன விருந்து ஏற்பாடுகளை சபை கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


