ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைககப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி கடந்த 10.10.2021 அன்று துவங்கியது.
திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர். இந்த பணி மிகச்சிறப்பாக மூன்று இடத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம், தங்கம், மண்பண்டம் உள்பட பல பொருள்கள் கிடைத்தன. உள்ளது உள்ளபடியே காட்சி படுத்தும் நிலையில் இங்குள்ள பொருள்களை அப்படியே காட்சி படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயககுனர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் யத்தீஸ்குமார், முத்துகுமார், ராணிமோல் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு பணி செய்து வந்தனர். உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் முன்னாள் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தற்போதைய தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஏற்பாடில் ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சார்பாக 5 ஏக்கர் நிலம் இலவசமாக பெற்று தரப்பட்டது. இதனால் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பரம்பு சுற்றி 114 ஏக்கரில் இரும்பு வேலி அமைக்கும் பணி கேட் அமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது.
இந்தியா அளவிலான சிறப்பு வல்லுனர்கள் ஆதிச்சநல்லூர் வந்து இங்கு கிடைத்த பொருள்கள் சோதனையிட்டனர். மேலும் வெளிநாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை இங்கு கொண்டு வந்து காட்சிபடுத்தவும் பணி நடந்து வருகிறது.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைப்பதற்கான முதல் கட்ட பணி 30 ந்தேதியுடன் முடிவடைந்தது.
இதற்கான முதல் கட்ட நிறைவு விழா ஆதிச்சநல்லூர் பரம்பு மலையரசி அம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. திருச்சி மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அதிகாரி ஜெய்கிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்தலைவர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வாளர் யத்தீஸ் குமார் வரவேற்று பேசினார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றி ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பொறியாளர் கலைசெல்வன் ஆய்வு மாணவர்கள் மணிகண்டன், குமரேசன், அருண்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆய்வாளர் ராணி மோல் நன்றி கூறினார்.
இதுகுறித்து திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் கூறும் போது, இந்த ஆண்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கான முதல் கட்ட அகழாய்வு முடிந்துள்ளது. இதில் கிடைத்த பொருள்கள் விரைவில் காட்சிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நடந்த அகழாய்வு சம்பந்தபடுத்த ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். மேலும் விரைவில் இங்கு புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடத்தினை தேடி அகழாய்வு செய்யும் பணி நடக்கவுள்ளது. இதற்கான ஆய்வை விரைவில் துவங்க உள்ளோம். என்று அவர் கூறினார்.
உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கும் பணியில் முதல்கட்ட அகழாய்வு பணி முடிந்த நிலையில் விரைவில் அருங்காட்சியம் அமைக்கும் பணியில் வாழ்விடங்களை தேடும் பணியும் விரைவில் துவங்கும் எனது ஆதிச்சநல்லூர் ஆர்வலர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர்.


