தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறந்த சேவையை பாராட்டி மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருக்கு பாராட்டு சான்றிதழ். மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மதர் சமூக சேவை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 18 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், சுத்தம், சுகாதாரம், மருத்துவம், உள்பட பல்வேறு சேவைகளையும் மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க விதைப்பந்து விதைத்தல், மரக்கன்று நடுதல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மேலும் பனை மர விதைகளை விதைத்து வருகிறனர். தற்போது வரை 69,97,439 பனை மர விதைகளை விதைத்துள்ளனர். தொடர்ந்து விதைத்து வருகிறனர்.
இவர்களின் இந்த சேவையை பாராட்டும் விதமாக இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதர் சேவை நிறுவன இயக்குநரும், பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவரும், கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ்ஜேகென்னடி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் உடன் இருந்தனர்.


