செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி துணை இயக்குனர் சுகாதார பணிகள் உத்தரவின் படி, வட்டார மருத்துவ அலுவலர் (வல்லநாடு) ஆலோசனையின் பேரில், துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலக நலக்கல்வியாளர் அந்தோணிசாமி, பூச்சியியல் வல்லுநர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார், கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், முதலாம் ஆண்டு துறை தலைவர் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர்கள் சண்முகபெருமாள், சர்பின், கிராம சுகாதார செவிலியர் விவேகானந்த விஜயா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவர்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் மாணவிகளுக்கு நேப்கின்கள் வழங்கப்பட்டது. சுகாதார நல கல்வி குறித்தும் பேசினர். திட்ட அலுவலர் சின்ன ராஜா நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


