மேலஆழ்வார்தோப்பில் கிராம உதயம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் இன்று கொரோனா காலகட்டத்தில் நாம் அனைவரும் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், கொரோனா வைரஸ்சில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கிராம உதயம் இயக்குநர் சுந்தரேசன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். கிளை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் ராமர் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களும் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.


