தெய்வச்செயல்புரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் பாரதி ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றிய சார்பில் தெய்வச்செயல்புரம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு மற்றும் நங்கமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சுடலைமுத்து ஒன்றிய துணைத்தலைவர் தம்பான், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் சாமிநாதன், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் சிவசண்முகம், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது புதுப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் முத்துக்குமார் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


