ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல் நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதலாவதாக குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் கொடியேற்றப்பட்டது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் தேசிய கொடியை பொறியாளர் காளியப்பன் ஏற்றினார். மாணவ மாணவியரின் கண் கவர் நடனங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் இறைவாழ்த்து மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். பள்ளி ஆட்சிக் குழுத் தலைவர் இராமானுசம் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் பொறியாளர் காளியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றினார். பள்ளி ஆட்சிக்குழு தலைவர் இராமானுசம் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துசிவன் வரவேற்புரையாற்றினார்.
தமிழாசிரியை முத்துலெட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.சிறப்பு விருந்தினர் பொறியாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். கல்வி அபிவிருத்தி சங்க செயலர் கோட்டை சண்முக நாதன், பள்ளிச் செயலர் முத்தையா, பள்ளி பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் தியாகச் செல்வன், துணைத்தலைவர் வெங்கடாச்சாரி பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரியர் முத்தையா மற்றும் பள்ளி ஆட்சிமன்ற குழு இயக்குநர்கள் வாழ்த்துரையாற்றினர்.
தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பை என்.சி.சி. பொறுப்பாளர் ஆசிரியர் மாணிக்கம் நடத்தினார். சுதந்திர தின தேசபக்தி பாடல் களை இடைநிலை ஆசிரியை சீதா லெட்சுமி பாடினார். விழாவில் மாணவர்களின் பேச்சுபோட்டி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பள்ளியில் செயல்படும் அறக்கட்டளைகள் மூலம் பரிசுகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ஆறுமுகம் நன்றியுரையாற்றினார். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


