சவலாப்பேரியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள சவலாப்பேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
நிகழ்ச்சிக்கு கருங்குளம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் குழு உறுப்பினர் பணி பற்றியும், பள்ளி செயல்பாடுகளில் அவர்களது கடமை குறித்து எடுத்துரைத்தார்.


