75வது சுதந்திர விழா செய்துங்கநல்லூர் நூலகத்தில் நடை பெற்றது.
வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிநாதன் மூவர்ண கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் விட்டிலாபுரம் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர் சோமசுந்தரம் கவுரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள், மற்றும் பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன், நூலகர் கள் பாலமுருகன், தளவாய், பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகர் சம்சுதீன் நன்றி கூறினார்.


