சவலாப்பேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கருங்குளம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் இராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் குழு உறுப்பினர் பணி பற்றியும், பள்ளி செயல்பாடுகளில் அவர்களது கடமை பற்றியும் எடுத்துரைத்தார்கள். நாட்டுப்பண்ணுடன் பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது.


