தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட பள்ளி செல்லா ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் அவர்கள் ஆலோசனையின் பேரில் இன்று ஆகஸ்ட் 15ஆம் நாள் கருங்குளம் பஞ்சாயத்து, நாணல்காடு பஞ்சாயத்து, தெற்கு காரேசரி பஞ்சாயத்து, வல்லநாடு பஞ்சாயத்து, ஆகியவற்றில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மேற்பார்வையாளர் சா.ஜெயமேரி அற்புதம் ஆசிரியர் பயிற்றுநர்கள் இராஜேந்திரன், சிவசங்கரி, பீபேகம், வெயிலு முத்து ஆகியோர் கலந்து கொண்டு “நீண்ட நாள் பள்ளி செல்லாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் “, இடைநிற்றலை தவிர்த்தல், பள்ளி செல்லா மாணவர்கள் இல்லாத கிராமம் என்ற நிலை உருவாக்குதல், 6 முதல் 18 வயது வரை மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் சேருதல் புலம்பெயர்ந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல் ஆகிய கூட்டப் பொருள்களை கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தினர்.


