கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலில் பவுத்ரோத்ஸவ திருவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் மலைமேல் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பவுத்ரோத்ஸவ திருவிழா நடைபெறுவது வழக்கம். திருக்கோயில்களில் தினசரி நடைபெறுகின்ற பூஜை ஏதேனும் விடுதல் ஏற்படும். அதனை தொடர்ந்து பரிகாரமாக ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவ திருவிழா நடத்தப்படும்.
இந்த ஆண்டும் கடந்த மூன்று நாட்கள் நடந்தது. கடைசி நாளான இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு திருமஞ்சனம் 9.30 மணிக்கு ஹோமம் நடந்தது. பின்னர் 11.30 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற்றது. 12 மணிக்கு பவுத்திர மாலைகள் படி களையப்பட்டு அர்ச்சகர்கள் ராஜேஷ் ஆழ்வார் உடையவர் ஆகியோருக்கு சாற்றப்பட்டது.
பின்னர் 1 மணிக்கு திருவாராதனம் சாற்று முறை தீர்த்தம் சடாரி பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கருங்குளம் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி கிராம கமிட்டி சின்ன கண்ணன் கணேசய்யர். சங்கர். சேகர் கள்ளப்பிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


